கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய பிற்பட்டோர் நல அதிகாரி கைது
கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய பிற்பட்டோர் நல அதிகாரி கைது
கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய பிற்பட்டோர் நல அதிகாரி கைது

தேனி:கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய, தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெகதீசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், போடியை சேர்ந்த விவசாயி அமர்நாத் (60).
இந்த கடன் அனுமதி வழங்க, 10 ஆயிரம் ரூபாயை ஜெகதீசன் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து அமர்நாத், தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். தேனி என்.ஆர்.டி., நகரில் அவர் தங்கியிருந்த அறைக்கு, நேற்று காலை சென்ற அமர்நாத்,வேதிப்பொருள் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெதீசனிடம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
அறையை சோதனையிட்ட போலீசார், 4.75 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். இதில் கணக்கு காண்பிக்கப்பட்ட, 2.25 லட்சம் ரூபாயை அவரிடம் போலீசார்திருப்பி கொடுத்தனர். கணக்கில் காட்டப்படாத 2.50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். தான், இருதய நோயாளி என அவர் கூறியதால், போலீசார் அவரை தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.